நம்பிக்கை ஆண்டு விழா போட்டியின் விபரங்கள்!

சாதனையாளர்கள்

அனைத்து துறைகளிலும் சாதனை படைத்தவர்களையும், நம் நாட்டில் இளம் சாதனையாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்படும். உங்க குழந்தையையும் சாதனை குழந்தையாக சாதிக்க உதவுங்கள்.

Wednesday, May 03, 2006

சாதனை 4 - கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது


கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பர். ஆம் அந்த பொன்மொழிக்கு ஏற்ப மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிறுவன் கலக்கி கொண்டு இருக்கிறான். அதுவும் காளையை அடக்கும் போட்டியில். இந்த காளையை அடக்கும் போட்டியை சில நாடுகளில் வீரவிளையாட்டாக கருதுகிறார்கள். ஒரு நாட்டில் அந்த விளையாட்டை தேசிய விளையாட்டாக வைத்துள்ளனர். நமது நாட்டில் கூட அதுவும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் காளையை அடக்கும் போட்டியை நடத்தி பரிசும் வழங்குகிறார்கள்.

மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர் ரபியல் மிரபல் மார்டினெக்ஸ். இவரது மகன்தான் ரபிட்டா மிரபல். இவனுக்கு தற்போது 15 வயது தான் ஆகிறது. ஆனால் இந்த வயதில் காளைகளை அடக்கும் ஏராளமான போட்டியில் கலந்து கொண்டு வெற்றிவாகைசூடியுள்ளான். மொத்தத்தில் அவனது சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

9 வயதில் கலந்து கொள்ள ஆரம்பித்த இவன், இன்று வரை அலாதி பிரியத்துடன் காளை அடக்கும் போட்டியில் கலந்து கொள்கிறான். அதற்கு பாதுகாப்பு கவசமாக அவன் வைத்துக் கொள்வது சிவப்பு நிறத் தொப்பியும்,ஒரு இரும்பு கேடயமும் ஆகும்.

இது வரையிலும் சுமார் இரண்டு டஜன் அதாவது 24 போட்டிகளில் கலந்திருக்கிறான். சமீபத்தில் ஏப்ரல் 16 ந்தேதி மெக்சிகோ அருகில் உள்ள டெக்ஸ்கோகோவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டான். அந்த போட்டியில் உயிரை பணயம் வைத்து வெற்றி பெற்றான். இந்த மாதிரியான போட்டியில் சிறியவர்களும், பெரியவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆனாலும் இந்த சின்ன வயதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவது கடினமான ஒன்றாகும். இந்த காளையை அடக்கும் போட்டியில் பல தடவை உயிரை காப்பாற்றி வெற்றி பெற்றிருக்கிறான்.

நன்றி: தினத்தந்தி

2 Comments:

At Thursday, May 04, 2006 8:19:00 AM, Anonymous Anonymous said...

அது என்னவோ,இந்த விளையாட்டை காண சகிக்கவில்லை.ஒரு முறை எனது மச்சான் பிரான்ஸ் போனபோது எடுத்து வந்தார்.
kumar-singapore

 
At Thursday, May 04, 2006 1:47:00 PM, Blogger பரஞ்சோதி said...

குமார், உங்கள் வருகைக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி.

உண்மை தான், இது போன்ற மிருக வதைப் போட்டிகளை தடை செய்ய வேண்டும்.

நான் இங்கே கொடுத்ததை ஒரு தகவலாக எடுத்துக் கொள்ள மட்டுமே கொடுத்தேன், நம்ம ஊரில் யாரும் ஆபத்தான விளையாட்டை விளையாட பெற்றோர் அனுமதிக்க மாட்டாங்க தானெ.

ஒரு சின்ன செய்தி, நான் சின்ன வயதில் நன்றாக கோழி பிடிப்பேன் :).

 

Post a Comment

<< Home


நம்பிக்கை ஆண்டு விழா போட்டியின் விபரங்கள்!